தென்மேற்கு சிட்னியில், செயிண்ட் ஆண்ட்ரூஸ் பகுதியில் வன்குமுறைக் கும்பலொன்று வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலைவேளையிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த சிறுவன், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று சிறுவர்களையும், இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.
இவர்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிணையும் மறுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
சபா.தயாபரன்