“தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“ தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
நியூசிலாந்து, ஓக்லாண்ட் மாநகரில் உள்ள மவுண்ட் ரோஸ்கில் போர் நினைவு மண்டபம், 13 வது மே சாலை, மவுண்ட் ரோஸ்கில், ஓக்லாந்து 1041 எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் மாலை 1800 முதல் 2030 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது. (Mt Roskill War Memorial Hall, 13 May Road, Mt Roskill, Auckland 1041, New Zealand)
இந்நிகழ்வு திரு. சண் வேலுப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில் அறிமுக உரையை திரு. மேவின் கொன்ஸ்ரன்ரைன் அவர்கள் உரையாற்றுவார். அத்துடன் நூல்களின்
ஆய்வுரைகளை திரு. சிவசரவணபன் சர்வேஸ்வரன், திரு. பூபாலசிங்கம் பிரதீபன், திரு. கௌரிசங்கர் சுதந்திரபாலன், திரு. பிரேம்குமார் கந்தசாமி, திருமதி. வித்தியா நந்தகுமார் மற்றும் திருமதி. தமிழினி வாமதேவன்
ஆகியோர் வழங்குவார்கள்.
ஓக்லாண்ட் மாநகரில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார்.