ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட்டு, பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது. தற்போது வரை 75 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ,
இஸ்ரேலின் நிபந்தனைப்படி ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால், அவர்களுக்கு நரகத்தின் வாசல் திறக்கப்படும்.
அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் ஹமாஸ் அமைப்பினரின் தலைநகரான காசாவை ரபா மற்றும் பெயின் ஹனூன் போல் மாற்றுவோம்." - என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு நகரங்களும் இஸ்ரேல் தாக்குதலில் இடிபாடுகள் குவிந்த நகரமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.