இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் பலனளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.
ரஷ்ய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
" சீனாவும், இந்தியாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள். எனக்கு பிடிக்காததை செய்வதை நீங்கள் நிறுத்துங்கள் அல்லது நான் உங்கள் மீது வரிகளை விதிப்பேன் என்று அவர்களிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை. இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் பலனளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது.
இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் கோரிக்கைகளை எதிர்த்து வருகிறன. அமெரிக்காவின் அழுத்தத்தை விட தங்கள் சொந்த தேசிய நலன்களை அடிப்படையாக கொண்ட கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.
இந்த வரி அச்சுறுத்தல், அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல், குறைந்தபட்சம் அவர்களுக்கு மிகவும் கடுமையான சிரமங்களை உருவாக்குகிறது. " எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.