அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு ஜனாதிபதிடிரம்ப் உத்தரவிட்டார்.
1992 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 33 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்கா அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவுள்ளது.
இதனிடையே டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் விட அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. என்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்களை புதுப்பித்ததால் இது சாத்தியமானது. அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் ரஷ்யா இரண்டாமிடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.
ஆனால் இன்னொரு 5 ஆண்டுகளில் சீனாவிடமும் சரிசமமான ஆயுதங்கள் இருக்கும்மற்ற நாடுகளின் பரிசோதனை திட்டங்களை கருத்தில் கொண்டு, நம்முடைய அணு ஆயுதங்களை சம அளவில் பரிசோதிக்க உத்தரவிடுகின்றேன் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.