ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈரானிடம், சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சரால், ஈரான் வெளிவிவகார அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர், சர்வதேச கடற்பயண சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இந்த நீர்வழியைத் திறந்து வைப்பதில் உலக நாடுகளுக்குப் பொதுவான ஆர்வம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இப்பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க போர்நிறுத்தத்தை ஆதரிப்பதோடு, அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் சீனா தனது ஆதரவை வழங்கியுள்ளது.