இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 03 தசாப்த கால சிறைத்தண்டனையின் பின்னர் விடுதலையான A.G.பேரறிவாளன் சட்டத்தரணியாக தம்மை பதிவு செய்துகொண்டார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்துகொண்ட A.G.பேரறிவாளன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணியாற்றவுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு விடுதலை செய்தது.
முன்னதாக அவரது மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டதுடன், பயங்கரவாத குற்றச்சாட்டுகளும் நீக்கப்பட்டன.
சிறையிலிருந்த போதே தனது கல்வி ஆர்வத்தை கைவிடாத பேரறிவாளன், பல்வேறு சாதனைகளை படைத்திருந்ததுடன் பல பட்டப்படிப்புகளையும் பூர்த்தி செய்திருந்தார்.
விடுதலையின் பின்னர் பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இணைந்த அவர், தற்போது சட்டத்தரணியாக பதிவு செய்துள்ளார்.