அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக இன்று (13) பீஜிங் நோக்கி பயணமானார்.
என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang உள்ளிட்ட முக்கியத் தொழிலதிபர்கள் டிரம்புடன் இணைந்து பயணித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்களைத் தணிக்கவும், விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய ஒப்பந்தங்களை எட்டும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.
ஈரானுடனான போர் மற்றும் உள்நாட்டுப் பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளால் டிரம்ப் அரசியல் ரீதியாகச் சவால்களைச் சந்திக்கும் வேளையில், குறித்த இராஜதந்திர முயற்சி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் பற்றியும் இதன்போது பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ட்ரம்பின் சீன பயணம் அனைத்து தரப்பினரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.