ஈரான்பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
" இறுதியில் நாங்கள் ஆற்றல் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்" என்று டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு பாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
" நாங்கள் இன்று இரவு அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப் போகிறோம், நாளை இரவும் அவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்துவோம்.அதன் பின்னர் அடுத்த வாரம் அவர்களுக்கு நிலைமை மிகவும் மோசமடையப் போகிறது.
ஏனெனில் அடுத்த வாரம் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்."எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
போரின் போது மனிதாபிமான நடத்தைகள் குறித்த 1949 ஆம் ஆண்டின் ஜெனிவா உடன்படிக்கைகள் (Geneva Conventions), பொதுமக்களுக்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடை செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.