அமெரிக்காவில் ஒரு கோடியே 58 ஆயிரம் பேருக்கு கொரோனா

Colombo 3 ஆண்டுகள் முன்

banner

அமெரிக்காவில் மட்டும் ஒரு கோடியே 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 230 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.





63 லட்சத்து 91 ஆயிரத்து 208 பேர் குணமடைந்துள்ளனர். 34 லட்சத்து 25 ஆயிரத்து 148 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.





அதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது.





தற்போதைய நிலவரப்படி, 4 கோடியே 96 லட்சத்து 68 ஆயிரத்து 976 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





வைரஸ் பரவியவர்களில் ஒரு கோடியே 31 லட்சத்து 64 ஆயிரத்து 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90 ஆயிரத்து 889 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.





கொரோனாவில் இருந்து 3 கோடியே 52 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.