மூடப்படுகிறது KNOX CITY MYER

Australia 2 ஆண்டுகள் முன்

banner

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் தனது கிளையை வியாபித்துள்ள பிரபல வர்த்தக அங்காடியான myer , 44 ஆண்டுகளாக நாடத்தி வந்த கிளையொன்றை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளது.





மெல்பேர்ன் நகரிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள  Westfield Knox   இல் 1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கிளை நிறுவனமே இம்மாதத்துடன் மூடப்படுகின்றது. நீண்ட காலமாக இயந்திவந்த நிறுவனம் , மூடப்படுப்படுவதற்கு அப்பிராந்திய மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். குறித்த நிறுவனம் மூடப்படுவதால் நூற்றுக்கும் அதிகமானோர் வேலையிழப்பை சந்திப்பர் என தெரியவருகின்றது.





இன்றைய நவீன தொழில்நுட்ப  உலகில் , வியாபார  சேவைகளும் இணையத்தின் ஊடாகவே பெரும்பாலும் இடம்பெற்றுவருகின்றது.  அலிபாபா , அமேசன் போன்ற நிறுவனங்கள் ஒன்லைன் விற்பனையில் வெற்றிநடைபோடுவது இதற்கு சிறந்த சான்றாகும். அதேவேளை mNjNtis coles kmart target woolworths போன்றனவும் ஒன்லைன் ஓடர்களை நேரடியாக வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கின்றன.  





கொரோனா அலையில் சிக்குண்ட வர்த்தக நிலையங்கள் பல,  தங்களது பொருட்களை,  ஒன்லைன் முறைமை ஊடாக மக்களை சென்றடைவதற்கான நடைமுறைகளை கடைப்பிடித்தன.  இதில் பல நிறுவனங்கள் வெற்றியும் கண்டன.  வர்த்தக நிறுவனங்கள் தங்களது இணையத்தளத்தை தாண்டி பொருட்களை விற்பனை செய்வதற்கு வழி செய்யும் வகையில் ebay மற்றும் face book market palce  ஆகியன கூட வழி சமைத்துக்கொடுத்திருக்கிறது.  





myer போன்ற மிகபெரும் வர்த்தக நிலையங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவை.  எனவே, இந்நிறுவனங்கள் ஒன்லைன் விற்பனையை செய்வது கடினமான செயலாக இருக்கப்போவதில்லை. கொரோனாவுக்கு முன்னரும் myer போன்ற நிறுவனங்களில் ஒன்லைன் மூலம் பொருட்களை முன்பதிவு செய்ய முடியும்.  





ஆனால் முற்று முழுதாக ஒன்லைன் ஓடர்கள் மூலம் இலாபம் ஈட்டிக்கொள்ள முடியும் என்பதற்கான பரீட்சார்த்த காலப்பகுதியாக கொரோனா காலத்தை பாவித்து வெற்றி கண்டதன் பிரதிபலனே 44 ஆண்டுகளாக நடத்தப்பட்ட வந்த Know city myer  மூடப்படுவதற்கான காரணம்.  இவ்வாறான ஓன்லைன் விற்பனை மூலம் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி வெற்றி பெற்றால் கொரோனா போன்ற எதிர்பார புயல்களுக்கிலிருந்த தப்பித்து நீடித்து நிலைக்க முடியும் என்பதே பல நிறுவனங்களின் உத்தியாக இருக்கின்றது.  





அத்துடன் குறிப்பிட்ட myer  விற்பனை நிலையத்தை அண்டிய பிரதேசத்துக்கு அருகாமையில் Eastland, Fountain Gate, Chadstone and Frankston ஆகிய இடங்களில்  தனது கிளைகள்  மக்களுக்கான சேவையை வழங்க காத்திருக்கிறன என அந் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன் கட்டடங்களின் செலவீனங்களை குறைப்பதன் ஊடாக மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.





44 ஆண்டுகள் நடத்தப்பட்ட Myer  நிறுவனத்தின் இடத்தில் அடுத்த வருடம் முதல் Woolworths  நிறுவனம் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதெனிலும் ; Knox city யின் ஆடையாளமாக திகழந்த myer மூடப்படுவது அப்பிராந்திய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.