பாகிகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து தொடரும் தற்கொலைத் தாக்குதல்கள்

banner

பாகிஸ்தானில் சீனர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் சீன நாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் பாக்கிஸ்தானை சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது.





பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியமான பலுஸ்திதான் நகரில் அதிவிரைவ சாலையை அமைக்கும் பணியில் சீனர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் சென்ற வாகன தொடரணியைக்குறிவைத்தே இத் தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.





இத்தாக்குதல் சம்பவத்தை பாக்கிஸ்தானில் உள்ள சீனத் துதரகம் வன்மைகயாக கண்டித்துள்ளதுடன் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இச்சம்பவத்தில் காயமடைந்த – உயிரிழந்தவர்களுக்கு தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.





இதேவேளை, கடந்த ஜீலை மாதம் அதிவிரைவுச்சாலை அமைக்கும் பணிக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் ஒன்பது சீன நாட்டவர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.





இச்சம்பவங்களின் பின்னால் பாக்கிஸ்தானில் இருந்து இயங்கும் தெய்றிக்- இ- தலிபான் அமைப்பே காரணம் என பாக். நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டியிருந்தார். எனினும் குறித்த குற்றச்சாட்டை அவ்வமைப்பு மறுதளித்திருந்தது.





இதேவேளை, இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் குறித்து உனடியாக விசாரணைகளை ஆரம்பத்து சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சீன துதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.