கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு திறப்பு? இன்று முடிவு

banner

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை குறைந்தபட்சம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறு வைத்தியர்கள் உட்பட சுகாதார தரப்பினரும், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இது தொடர்பில் இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.





கொவிட் – 19 ஒழிப்பு செயலணியின் வாராந்த கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.





இக்கூட்டத்தின்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை உட்பட தற்போதைய சுகாதார நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தரவை 13 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.





அத்துடன், ஒரு நாள் தளர்வின் பின்னர் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டால்கூட மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட நடைமுறைகள் தொடரும் எனவும் தெரியவருகின்றது.





செப்டம்பர் 18 ஆம் திகதிவரை ஊரடங்கை நீடித்தால் 7 ஆயிரத்து 500 கொரோனா மரணங்களை தடுக்கலாம் எனவும், ஒக்டோபர் 02 ஆம் திகதிவரை நிடித்தால் 10 ஆயிரம் மரணங்களை தடுக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் பங்களிப்புடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.