சீனத் தலையிடிக்கு - ‘அணு’ ஆயுத தைலம் எதற்கு?

banner

16 செப்டம்பர் 2021 அன்று, ஆஸ்திரேலியா பிரதமர், இங்கிலாந்து பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஆகியோர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா (AUKUS) இடையே மேம்பட்ட முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி அறிவித்தனர். 





AUKUS-இன் கீழ், முதல் பெரிய முயற்சியாக, ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் எட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கியிருக்கிறது. அடிலெய்டில் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க ஆஸ்திரேலிய அரசு விரும்புகிறது எனவும் அறிவித்துள்ளது.





இந்த அறிவிப்பின் மூலம், ஆஸ்திரேலிய அரசாங்கம் இனி தாக்குதல் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் (Attack Class Submarine Program) திட்டத்தில் தொடராது என்ற நிலைப்பாட்டையும் உறுதிப் படுத்தியுள்ளது.





ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், AUKUS ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த 18 மாதங்களில் ஒரு விரிவான வேலைத் திட்டத்திற்கு உறுதியளித்துள்ளன. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து- அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மூலம் இதை அடைவதற்கான உகந்த பாதை உள்ளது.





AUKUS-இல் ஆஸ்திரேலியாவின் பங்கை எளிதாக்க, VADM ஜொனாதன் மீட் AO தலைமையிலான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் பணிக்குழுவை அரசாங்கம் நிறுவியுள்ளது.





அணுசக்தி நீர்மூழ்கியின் சிறப்பு: 





அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்தோ-பசிபிக் பகுதியில் மோசமடைந்து வரும் அபாய சூழலுக்கு பதிலளிப்பதில், வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை விட குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளன என ஆஸ்திரேலிய கப்பற்படை அறிவித்துள்ளது.





- அதிக நேரம் செயல்படும் வலிமை.





- அதிக வேகம்





- அதிக வாழ்நாள்





- மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளை எடுத்துச் செல்வதற்கான அதிக திறன்





- வாழ்நாள் முழுவதும் எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியமில்லை





- டீசல் என்ஜின்களை இயக்க மாஸ்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை, அதனால் ரேடார்கள் கண்டறியும் வாய்ப்பை கணிசமாக குறைக்கிறது. 





பிரான்சிற்கு இழைக்கப்பட்ட துரோகம்:





AUKUS எனும் திடீர் ஒப்பந்தம், சீனாவை மட்டுமல்லாமல், பிற நட்பு மற்றும் வர்த்தக உறவு நாடுகளையும், ஆஸ்திரேலியா பகைத்துள்ளது.





இதன் காரணமாக, ஆஸ்திரேலியாவின் 2016-ஆம் ஆண்டு பிரான்ஸ் கப்பல் கட்டும் கடற்படை குழுவுடன் இணைந்து, 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க புதிய ஒப்பந்தம் தோல்வியடைந்து, 90 பில்லியன் ஆஸி டாலர் (66 பில்லியன் டாலர்) வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரான்சு அரசு கூறியிருக்கிறது.





இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த ஆஸ்திரேலிய பிரதமர், "ஒரு பிரதமராக நான் ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவுகளை எடுக்க வேண்டும்," என்று கூறியதுடன், "பிரான்ஸ் அரசும் அதையே செய்யும் என்று எனக்குத் தெரியும்." எனவும் சுட்டிக்காட்டினார்.





அதிருப்தி தெரிவித்த நியூசிலாந்து:





ஆஸ்திரேலியாவின் இந்த இரகசிய மற்றும் தீடீர் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் அறிந்து, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் , ஆஸ்திரேலியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அதன் கடற்பக்தியில் நுழைய அனுமதிக்காது என்று உறுதியுடன் கூறியுள்ளார்.





பல காலமாக, அணுசக்தி இல்லா கொள்கையைக் கொண்டிருப்பது, நியூசிலாந்து இந்த புதிய கூட்டணியில் சேர அழைக்கப்படாததற்கு ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த உடன்படிக்கையானது "அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நிச்சயமாக ஆஸ்திரேலியா உடனான வலுவான உறவில் எந்த மாற்றமும் இல்லை." என்பதையும் தெரிவித்தார்.





சீனாவுக்கு எதிரான போர் முரசா அல்லது பாதுகாப்பு பலப்படுத்துதலா? 





பாதுகாப்பு அமைச்சர் டட்டன், சீனாவின் 'பெரிய இராணுவ கட்டமைப்பு' என்கிற தொணியில் பேசி, நம்மை பயமுறுத்த முயல்கிறார். ஆனால், அமெரிக்கா செய்வதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகத்தான் இராணுவத்திற்கு சீனா செலவிடுகிறது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.





இப்படிப் போருக்குத் தயாராவதை விட, நாம் ஏன் அமைதிக்கான வாய்ப்புகளையும்,வழி வகைகளையும் அதிகரிக்க முயற்சிக்கவில்லை என்கிற கேள்வியும் மக்களிடத்தில் உள்ளது.





அமெரிக்கா என்னும் ஆட்கொல்லியும், உலகிற்குத் தேவையே இல்லாத வல்லரசு என்கிற ஆணியும்: 





அமெரிக்காவில் 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன, அவை அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் 235 ஆல் இயக்கப்படுகின்றன, அவை அணு ஆயுதங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம். ஒவ்வொரு நீர்மூழ்கியும் 24 ஏவுகணைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் எட்டு ஹைட்ரஜன் குண்டுகளுடன் ஆயுதம் ஏந்தியுள்ளது - ஒரு ஹிரோஷிமா வெடிகுண்டை விட 30 மடங்கு கொல்லும் சக்தி. இத்தகைய அணுசக்தி பூமியில் வாழ்வை முடிவுக்கு கொண்டுவர இது போதுமானது. '





- டாக்டர் ஹெலன் கால்டிகாட் 





முதலில் குழந்தை நல மருத்துவராக பயிற்சி பெற்ற டாக்டர் கால்டிகாட், பசிபிக் பகுதியில் அணு ஆயுதங்களின் பிரெஞ்சு வளிமண்டல சோதனை முடிவுக்கு கொண்டுவர தேசிய இயக்கத்தை வழிநடத்தினார்.





ஆஸ்திரேலிய அரசாங்கம் இறுதியில் பிரான்சை சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றது, பிரான்ஸ் நிலத்தடியில் சோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.





அவர் லினஸ் பவுலிங்கால் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார், மேலும் சமூகப் பொறுப்புணர்வுக்கான மருத்துவர்களின் மறுசீரமைப்பிற்கான திறவுகோலாக அங்கீகரிக்கப்பட்டு பின்னர் 1985 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.





'80 நாடுகளில் அமெரிக்கா 800 இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது. 9/11 முதல் அமெரிக்கா கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களைக் கொன்றதுடன், 14 ட்ரில்லியன் டாலர்களையும் செலவழித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது - இது கொலை - வெளிப்படையாக இருக்கட்டும், அது பாதுகாப்புத் துறை அல்ல, கொலைத் துறை.' என்று மேலும் விமர்சித்தார்.





ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமள்ள, உலகத்திற்கு எது நன்மை?:





சீனாவை எதிரியாக வடிவமைப்பது அபத்தமானது. நமக்கு இனி வல்லரசுகள் தேவையில்லை. இனி நமக்குத் தேவை, புவி வெப்பமடைதலை குறைக்கும் திட்டங்களாகும். நாம் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதையும் கொல்வதையும் நிறுத்த வேண்டும்.'





எல்லாவற்றிற்கும் மேலாக, ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையும் மற்றும் திறமையான இராஜதந்திரப் பார்வையும் தேவைப் படுகிறது. அருகிலுள்ள வடக்கு மற்றும் பசிபிக் பகுதியில் உள்ள அண்டை நாடுகளுடன் நம்பிக்கையையும் நட்பையும் உருவாக்குவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.