'ஐ.தே.கவே எதிர்காலத்தை தீர்மானிக்கும்'

banner

நாட்டில் தற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், எதிர்காலம் குறித்து சிந்திப்பதும், எதிர்காலத்தை நிர்மாணிப்பதும் ஐக்கிய தேசியக் கட்சியே என கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.





ஶ்ரீகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.





பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திந்து, தமது அரசாங்கம் மாணவர்களுக்கு டெப் கணினியை வழங்க முயற்சித்த வேளையில், எதிர்கட்சிகள் மாத்திரமன்றி, அரசாங்கத்திற்குள் சிலரும் அதனை எதிர்த்ததாக அவர் கூறினார்.





எனினும், இன்று மாணவர்களுக்கு அந்த கல்வி முறைமை அத்தியாவசியமாகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.





அத்துடன், எதிர்காலம் குறித்து சிந்தித்து, சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.