ரணில், சஜித் சங்கமம் சாத்தியமா?

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.





இதன்போது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றியும் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும் இருவரும் மனம்விட்டு பேசியுள்ளனர். அதுமட்டுமல்ல ரணில், சஜித் சங்கமம் பற்றியும் ஆராயப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.





" ராஜித நாம் ஏன் இணைந்து பயணிக்க கூடாது" -என வஜிர கேள்வி எழுப்ப, அதற்கான காலம் உதயமாகும் என ராஜித பதிலளித்துள்ளார்.





ஆனால் அரசாங்கத்துடன் இரகசிய உறவு வைத்திருப்பர்கள் தமது முகமூடியை கழற்றிவைத்துவிட்டு வந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் ராஜித இச்சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.