சஜித்தால் அழுது புலம்பும் டயானா

banner

ஐக்கிய மக்கள் சக்தி வழங்கிய தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்த, டயான கமகே, அதன்பின்னர் 20 இற்கு ஆதரவு வழங்கி மொட்டுடன் சங்கமித்தார். அரசுடன் அவர் உத்தியோகப்பூர்வமாக இணையாவிட்டாலும்கூட சபைக்குள் ஆளுங்கட்சி எம்.பி.போலவே செயற்பட்டுவருகின்றார்.





சஜித் அணிக்கு தமது கட்சியை வழங்கிய நன்றிக்கடனுக்காகவே டயானாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது. எனினும், கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக அவர் செயற்பட்டார். இதனால் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.





அதுமட்டுமல்ல அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடிதமும் அனுப்பியுள்ளது. இதனால் டயானா கடுப்பில் இருக்கிறார்.





பிரதமர் மஹிந்தவை அண்மையில் சந்தித்த அவர், தமது உள்ளக்குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார்.





" ஐ.தே.கவில் இருந்து விரட்டப்பட்ட அவர்கள் வீதியில் இருந்தனர். நான்தான் அடைக்காலம் (கட்சி) கொடுத்தேன். வீட்டுக்குள் புகுந்த அவர்கள் இன்று வேறொரு பூட்டைபோட்டுக்கொண்டு சாவியையும் வைத்துக்கொண்டுள்ளனர். என்னையும் விரட்டுகின்றனர்." - என்று அழுது புலம்பியுள்ளார்.





" அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா" என்ற பாணியில் புன்னகையை மட்டும் பதிலாக வழங்கிவிட்டு மஹிந்த புறப்பட்டுவிட்டாராம்.