சர்வதேச சவாலை எதிர்கொள்ள தெரிவுக்குழு?

Politics 2 ஆண்டுகள் முன்

banner

இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்திலுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் சவால்களை தொடர்பில் ஆராய்ந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றக்குழுவொன்றை அமைக்குமாறு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.





இது தொடர்பில் சு.கவின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.





இலங்கை இராணுவத் தளபதி உட்பட முப்படையிலுள்ள சிலருக்கு அமெரிக்கா செல்வதற்கான பயணத் தடை, சில மேற்குலக நாடுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்கள், வலியுறுத்தங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கே தீர்வு காணப்பட வேண்டும் என சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.





சர்வதேச மட்டத்திலான சவால்களுக்கு தீர்வை காணாவிடின், முன்னோக்கி பயணிக்கும்போது மேலும் பல சிக்கல்கள் உருவாகும் என்பதாலேயே சுதந்திரக்கட்சி தெரிவுக்குழு அமைக்கும் யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.