ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கத்தின் பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு இம்முறை முக்கியத்துவம் வழங்கப்பட்டு , கூடுதல் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
பாதீடு இன்றிரவு முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸால் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுத உற்பத்தி, ஆக்கஸ் நீர்மூழ்கி கப்பல் தளம், இராணுவ திறன் மேம்பாடு மற்றும் போர்க்கப்பல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்படவுள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் பாதுகாப்புக்காக 9.6 பில்லியன் டொலர்கள் ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த தொகை தற்போது ஒரு பில்லியனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில் பாதுகாப்புக்கு 10.6 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், ஏனைய நாடுகளும் அந்த அணுகுமுறையை பின்பற்றி வருகின்றமையை காணமுடிகின்றது.