மெல்பேர்ண் தென்கிழக்கில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 14 ஆம் திகதியே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த 24 வயது நபரொருவர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பிறகு உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 18 வயது இரு இளைஞர்களும், 17 வயது சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இரு இளைஞர்களும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். சிறுவன், சிறார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.