நியூ சவூத் வேல்ஸ் மாநில வீதிகளில் கடந்த 24 மணிநேரத்துக்குள் நடந்த மூன்று விபத்துகளில் ஐவர் பலியாகியுள்ளனர்.
கேசினோ வடக்கு பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் காரொன்று விபத்துக்குள்ளானதில் இரு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த 22 வயது யுவதியொருவர் உயிர் பிழைத்துள்ளார்.
இல்ஃபோர்டி பகுதியில் இன்று அதிகாலை இரு வாகனங்கள் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ப்ளூ மவுண்டன்ஸில் காரொன்று விபத்துக்குள்ளானதில் 62 வயது சாரதியும், 60 வயது பயணியொருவரும் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த மூன்று விபத்தகள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.