கூட்டாட்சி தேர்தலுக்குரிய அறிவிப்பை பிரதமர் அந்தோனி அல்பானீஸி நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என தெரியவருகின்றது.
மே 3 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும் வகையிலேயே இவ்வறிவிப்பு வெளியாகின்றது.
லிபரல் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எரிபொருள் கலால் வரியை பாதியாக குறைக்கும் திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் இன்று அறிவித்தார். பாதீட்டு பதிலுரையிலும் இது பற்றி அவர் தெளிவுபடுத்தவுள்ளார்.
இது பெரும் வரவேற்றை பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, தேர்தலை அறிவிப்பை விடுத்து கவனத்தை திசை திருப்பும் வகையில் பிரதமர் வியூகம் வகுக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.