கட்டாய விசா நிபந்தனைகளை மீறிய சூடான் நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னியில் தங்கியுள் 45 வயது பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பரமட்டா நீதிமன்றத்தில் அவர் நேற்று முற்படுத்தப்பட்டார்.
குடியிருப்பு ஊரடங்கு உத்தரவு மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றங்களுக்காக ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடும்.
குறித்த பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மே 23 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.