இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகள் கொள்கையை, கூட்டாட்சி தேர்தலுக்கு முன்னர் ஆஸ்திரேலியா கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேலிய அரசியல்வாதிகளால், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகள் கொள்கையானது ஹமாஸ் அமைப்புக்கு சாதகமாக அமையும் எனவும், இஸ்ரேலின் அழிவுக்கு வழிவகுக்கும் எனவும் இஸ்ரேல் அரசியல் பிரமுகர்கள் மேற்படி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இஸ்ரேலின் ஆளுங்கட்சியை சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். ஆஸ்திரேலியா-இஸ்ரேல் கூட்டணிக் குழுவின் துணைத் தலைவர் ஆண்ட்ரூ வாலஸ் ஊடாகவெ ஆஸ்திரேலிய எம்.பிக்களுக்கு கடிதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகள் கொள்கையை ஆஸ்திரேலியா நீண்டகாலமாக பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.