சீனாவிலிருந்து 91 மில்லியன் டொலர் பெறுமதியிலான ஐஸ் போதைப்பொருளை சிட்னிக்கு கடத்திவருவதற்கு சதி திட்டம் தீட்டிய நியூ சவூத் வேல்ஸ் நபருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
நான்கு பார்சல்களில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைக்கப்பட்டே போதைப்பொருள் கடத்திவரப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் மற்றும் ஆஸ்திரேலிய எல்லை படையினர் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின் பிரகாரமே ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதனை பெறுவதற்கு வந்திருந்த நியூகேஸிலுள்ள 39 வயது நபரொருவரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. பணம், துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டன.
குறித்த நபர் பென்ரித் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டவேளை அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.