கன்பராவில் சிறுமியுடன் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் மோதியதில் இரு பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
குழந்தை பராமரிப்பு நிலைய வளாகத்தில் இருந்த காரொன்றே இன்று காலை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. காருக்குள் எட்டு வயது சிறுமியொருவரும் இருந்துள்ளார்.
எனினும், 100 மீற்றர் தொலைவில் குறித்த சிறுமி இறக்கிவிடப்பட்டு கார் கடத்தி செல்லப்பட்டுள்ளது.
கார் வேகமாக பயணித்துக்கொண்டிருக்கையில் கன்பரா, அவென்யூ பகுதில் இரு பாடசாலை மாணவர்கள்மீது மோதியுள்ளது.
இதனால் 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் படுகாயமடைந்தனர். இவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சில கார்களுடனும் குறித்த கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து தப்பியோட முற்பட்ட கடத்தல் காரர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.