பொலிஸார்மீது தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு கம்பியுடன் ஓடிய நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் முன்னாள் குடியேற்றக் கைதியென்பது தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய நூற்றுக்கு மேற்பட்ட குடியேற்றக் கைதிகள் சமூகமயப்படுத்தப்பட்டிருந்தனர்.
கணுக்கால் வளையம் அணிதல் உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரே 33 வயதான Masi Ayiik என்பவர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை Doveton பகுதியில் Paperbark தெருவில் ஆணொருவருக்கும், பெண்ணொருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதன்போது குறித்த ஆண், பொலிஸாரை தாக்குவதற்காக இரும்பு கம்பியுடன் வந்து, பொலிஸாரை துரத்தியுள்ளார். இதன்போது அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அவர், பொலிஸ் பாதுகாப்பின்ககீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றார். மெல்பேர்ண் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும்.
இதற்கு முன்னரும் இரு தடவைகள் விசா நிபந்தனைகளை மீறியுள்ளார் என்ப துதெரியவந்துள்ளது.