கூட்டாட்சி தேர்தலில் லிபரல் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யூதர்கள் விவகாரம் தொடர்பான தூதுவர் பதவி தக்கவைக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.
எனினும், இஸ்லாமிய விவகாரம் தொடர்பான சிறப்பு தூதுவர் பதவி மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
இஸ்ரேல், ஹமாஸ் போரையடுத்து அதன் தாக்கம் ஆஸ்திரேலியாவிலும் எதிரொலித்தது. யூத விரோத மற்றும் இஸ்லாமிய விரோத சம்பவங்களும் அதிகரித்தன.
இதனையடுத்து யூத விரோத சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு யூத தூதுவர் ஒருவரும், இஸ்லாமிய விரோத சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இஸ்லாமிய தூதுவர் ஒருவரும் லேபர் ஆட்சியின்கீழ் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே இஸ்லாமிய தூதவர் பதவியின் அவசியத்துவம் பற்றி மீளாய்வு செய்யப்படும் எனவும், அந்த பதவியை தக்க வைப்பது தொடர்பில் உறுதியளிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.