விக்டோரியா வடமேற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று காலை 6.50 மணியளவிலேயே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் வந்து தீயை கட்டுப்படுத்துவதற்குரிய முயற்சியில் இறங்கினர். பின்னர் வீட்டுக்குள் சென்றபோது பெண்ணொருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான இரு ஆண்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.
தீ விபத்து சந்தேகத்துக்கிடமானதாக கருதப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.