குயின்ஸ்லாந்தில் காணாமல்போன இளம் தாயொருவர் உயிரிழந்துவிட்டார் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரோமா பகுதியை சேர்ந்த 29 வயதான குறித்த பெண் கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவை காணாமல்போன தாயினது என்பதை பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர் எவ்வாறு உயிரிழந்தார், அதன் பின்புலம் என்ன என்பது பற்றி பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.