ஆஸ்திரேலிய பங்கு சந்தை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக போரால் அமெரிக்க பொருளாதாரமும் மந்த நிலையை அடையும் என்ற அச்சத்துக்கு மத்தியிலேயே அதன் தாக்கம் ஆஸ்திரேலிய பங்கு சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
ஆஸ்திரேலிய பங்கு சந்தையில் இன்று பங்கு பரிவர்தன நடவடிக்கை ஆரம்பமாகி ஒரு சில நிமிடங்களில் சுமார் 200 நிறுவனங்களின் பங்குகள், 6 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்தன.
அதாவது பங்கு சந்தையில் ஆயிரத்து 600 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியைபோல் ஆஸ்திரேலிய பொருளாதாரமும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.