மெல்பேர்ண் வடமேற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சிறார்கள் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
5 வயதுக்குட்பட்ட சிறார்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர் எனவும், வைத்தியசாலையில் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு 9.30 மணியளவிலேயே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தின்போது பெற்றோர் வீட்டில் இருந்தனரா அல்லது வேறு எவரேனும் அங்கு வந்துள்ளனரா என்பது உட்பட இச்சம்பவம் தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
சிறார்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.