பிரிஸ்பேனில் 9 வயது குழந்தைமீது சூடான தேநீரை ஊற்றி தாக்குதல் நடத்திய நபரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை மூன்றாவது வாரமாகவும் தொடர்கின்றது.
சர்வதேச பொலிஸாரையும் உள்ளடக்கிய வகையில் தேடுதல் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிரிஸ்பேனில் உள்ள பூங்காவில் தனது குடும்பத்தாருடன் இருந்த குழந்தைமீதே குறித்த நபர் இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனால் குழந்தையின் முகம், கை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. வைத்தியசாலையில் சேர்க்கப்பட்;ட குழந்தைக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து சந்தேக நபரின் படங்களை பொலிஸார் வெளியிட்டனர். ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் அவரை தேடிவருகின்றனர். எனினும், அவர் இன்னும் சிக்கவில்லை.
இந்நிலையிலேயே மாநில மற்றும் சர்வதேச பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது.