நடவடிக்கை மற்றும் நிர்வாக அணுகுமுறை தொடர்பில் வலுவானதொரு பொறிமுறை அவசியம் என்பன உட்பட ரோயல் ஆணைக்குழு அறிக்கையில் 122 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு படையினரின் தற்கொலைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ‘றோயல்’ ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
மூன்றாண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர் குறித்த ஆணைக்குழு பரிந்துரை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஏழு தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்படி அறிக்கை ஆளுநர் நாயகத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. அதன்பின்னர் பாதுகாப்பு அமைச்சரால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாண்டுகளில் நூற்றுக்கணக்கானோர் சாட்சியம் அளித்துள்ளனர். 6 ஆயிரம் சமர்ப்பிப்புகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
படையினரும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் தமக்கு நடந்தவை பற்றியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளனர். விசாரணை அறிக்கையில் 122 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.