Northern Territory முதல்வர் Lia Finocchiaro , தமது அரசின் புதிய அமைச்சரவையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன்படி முதல்வரின்கீழ் பொலிஸ் அமைச்சு கொண்டுவரப்பட்டுள்ளது. அவசர சேவைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை முன்னெடுப்பதற்காகவே குறித்த அமைச்சு முதல்வரின் கண்காணிப்பின்கீழ் செயற்படவுள்ளது.
4 ஆண்டுகளாக துணை எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட Gerard Maley துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு விவசாயம், மீன்வளம், எரிசக்தி உள்ளிட்ட பொறுப்புகள் கையளிக்கப்பட்டுள்ளன.
Bill Yan நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Jo Hersey கல்வி அமைச்சராகவும், Steve Edgington சுகாதார அமைச்சராகவும், Josh Burgoyne நீர்வளத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மேலும் மூன்று அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர்.
Northern Territory தேர்தலில் country liberal party கட்சி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.