இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் பிரிட்டனின் தீர்மானத்தை ஆஸ்திரேலியா வெளிப்படையாக ஆதரித்துள்ளது.
லண்டன் மற்றும் கன்பராவின் இந்த நகர்வானது இஸ்ரேலையும், அமெரிக்காவையும் கடுப்பாக்கியுள்ளது.
காசாவில் மக்களையும், மனிதாபிமான பணியாளர்களையும் பாதுகாப்பதற்காக ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து செயற்பட்டுவருகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
“ காசாவின் தற்போதைய நிலை மாற பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச பங்காளர்களுடன் ஆஸ்திரேலியா இணைந்து செயற்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 41 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.