செம்மறி ஆடுகளை உயிருடன் கடல்மார்க்கமாக ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும் கூட்டாட்சி அரசின் முன்மொழிவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியா முழுவதும் இருந்து வாகனங்களில் பேரணியாக வந்த விவசாயிகள், கன்பராவிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அணிதிரண்டனர்.
விவசாயிகளின் போராட்டத்தில் கூட்டாட்சி அரசியல்வாதிகளும் பங்கேற்றனர். எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனும் களமிறங்கி இருந்தார்.
அடுத்த வருடம் கூட்டாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகளின் இந்த போராட்டமானது லேபர் அரசுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.