சிட்னி, Blue Mountains பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு சிறார்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
9 மற்றும் 11 வயதுகளுடைய இரு சிறார்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மதியம் 12.40 மணியளவில் அவசர சேவை பிரிவினரும் மற்றும் அதிகாரிகளும் வீட்டுக்கு அழைக்கப்பட்டனர்.
அத்துடன், 42 வயது பெண்ணொருவர் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இச்சம்பவத்தால் சமூக பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறார்களின் மரணம் தொடர்பில் விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.