சிட்னி Blue Mountains பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு சிறார்கள் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்களின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 வயதுடைய Russell மற்றும் 11 வயதுடைய Ben ஆகியோரே இன்று பிற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
42 வயதான இவர்களது தயார் காயங்களுடன் காணப்பட்டார். பொலிஸ் காவலின்கீழ் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சுயமாக காயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குழந்தைகளின் மரணம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது பற்றி பொலிஸார் இன்னும் அறிவிக்கவில்லை. வீட்டில் இருந்து ஆயுதம் எதுவும் மீட்கப்படவில்லை. விசாரணை தொடர்கின்றது.