எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனின் அலுவலகம் மூன்றாவது முறையாகவும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய இறுதிக்கட்ட பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரிஸ்பேனில் உள்ள மேற்படி அலுவலகம்மீது இன்று அதிகாலை பெயின்ட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவரின் நிலைப்பாடுகளை விமர்சிக்கும் வகையிலான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
இச்செயலில் நால்வர் ஈடுபட்டுள்ளனர் எனவும், யுவதியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காசா போர் மற்றும் பூர்வக்குடி மக்கள் தொடர்பான எதிர்க்கட்சி தலைவரின் நிலைப்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளது.