மெல்பேர்ணில் லிப்டுக்குள் நபரொருவரை குத்திக்கொலை செய்தவருக்கு விக்டோரிய உயர்நீதிமன்றத்தால் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஜனவரி 16 ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவத்தில் 42 வயது நபரொருவரே கொல்லப்பட்டார்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்கு லிப்டில் ஏறியவேளையே 24 வயது இளைஞர் ஒருவர், அவர்மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.
தப்பிச்சென்ற இளைஞன் குயின்ஸ்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டு பெப்ரவரி 17 ஆம் திகதி மெல்பேர்ணுக்கு அனுப்பட்டார்.
இந்நிலையிலேயே கொலை குற்றத்துக்காக அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.