அன்சாக் தினத்தன்று மெல்பேர்ணில் பல கார்களை சேதப்படுத்தி நாசகார செயலில் ஈடுபட்ட பெண்ணை , பொலிஸார் வலை வீசி தேடிவருகின்றனர்.
மெல்பேர்ண் கிழக்கு பகுதியில் அத்தினத்தில் 30 இற்கு மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளன. வாகனங்களுக்கு அருகே சாதாரணமாக நடந்து சென்று, கூரிய ஆயுதத்தால் அவற்றை இப்பெண் சேதப்படுத்தியுள்ளார்.
குறித்த பெண் ஏழு தெருக்களுக்குச் சென்று, இந்த நாசகார செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்பெண்ணை அடையாளம் காணவும், அவர் ஓட்டிச் சென்ற காரை அடையாளம் காணவும் பொலிஸார் விசாரணை வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.
சபா.தயாபரன்.