புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஆஸ்திரேலியாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரை முன்னெடுத்துவருகின்றார்.
கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி அவர் உலக நாடுகளுக்குரிய பரஸ்பர அறிவிப்பை வெளியிட்டார். இதற்கமைய ஆஸ்திரேலிய பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் வாஷிங்டனுடன் பேச்சு நடத்துவதற்கு கன்பரா முயற்சித்துவருகின்றது.
ஆஸ்திரேலியா தன்னுடன் கலந்துரையாட முயற்சித்து வருவதாகவும், விரைவில் பேச்சு நடத்தப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இக்கலந்துரையாடல் இடம்பெறுமா என்ற கேள்விக்கு ட்ரம்ப் பதிலளிக்கவில்லை.