அமெரிக்காவில் இருந்து மெல்பேர்ணுக்கு கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த நபரொருவரே சூட்கேஸில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து 15 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார்.
ஏப்ரல் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 28 வயதான குறித்த இளைஞனுக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அவர்மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.