ஆஸ்திரேலியாவில் நாளை மறுதினம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 4 மில்லியனுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்னர்.
நேற்று மாலை 6 மணிவரையான நிலைவரப்படி 4.04 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர் என்று ஆஸ்திரேலிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஆரம்பக்கட்ட வாக்குப் பதிவு வீதம் அதிகரித்துள்ளது.
மேற்படி வாக்கு எண்ணிக்கையில் தபால்மூல வாக்களிப்பு எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. அதுவும் சேர்க்கப்படும் பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், 50 சதவீதமானோர் தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டனர் எனத் தெரியவருகின்றது.
சபா.தயாபரன்