தள்ளாடியபடி நடந்துசென்ற 92 வயது வயோதிப் பெண்ணை இளைஞர் ஒருவர், தாக்கி கீழே தள்ளும் கொடூர சம்பவம் மெல்பேர்ணில் பதிவாகியுள்ளது.
தரையில் விழுந்து மயக்கமடைந்த வயோதிப பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மெல்பேர்ண், வில்லியம்ஸ்டவுனில் உள்ள ஷாப்பிங் சென்டரொன்றுக்கு அருகாமையில் நேற்று மதியம் வயோதிப பெண் ஒருவர், ஊன்று கோலின் உதவியுடன் தள்ளாடியபடியே நடந்துகொண்டிருந்தார்.
அவரை அணுகிய மேற்சட்டை அணியாத இளைஞர் ஒருவர், தலைப்பகுதியில் தாக்கி அவரை கீழே தள்ளியுள்ளார். இது தொடர்பான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.
தாக்குதலையடுத்து சுயநினைவிழந்த வயோதிப் பெண் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிகிச்சையின் பின்னர் அவர் இன்று வீடு திரும்பினார்.
தாக்குதலில் ஈடுபட்ட 39 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மெல்பேர்ண் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.