ஆஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி மகத்தான வெற்றியை பெறும் என புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதேபோல லிபரல் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
YouGov எனும் அமைப்பினால் ஏப்ரல் மாதம் முழுதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் அடிப்படையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களிடம் அபிப்ராயம் பெறப்பட்டுள்ளது.
லேபர் கட்சி சார்பில் 84 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாக்ககூடும் எனவும் கூட்டணி சார்பில் 45 எம்.பிக்கள் வெல்லக்கூடும் எனவும் YouGov கணித்துள்ளது.
அதேவேளை, சில ஊடகங்களில் வெளியாகும் கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.