பேர்த் விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவரே ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் நேற்று முன்தினம் இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நபர், தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இக்குற்றத்துக்காக அவருக்கு 3 ஆயிரத்து 130 டொலர்கள் அபராதம் விதிக்கப்படக்கூடும். மே 25 ஆம் திகதி அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.