இங்கிலாந்து மன்னர் மற்றும் ராணி ஆகியோர் ஆறு நாட்கள் பயணமாக ஆஸ்திரேலியா வரவுள்ளதை ராஜ குடும்பம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி ஒக்டோபர் 18 முதல் 23 ஆம் திகதிவரை அவர்களின் ஆஸ்திரேலிய பயணம் அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மன்னர் மற்றும் ராணியை வரவேற்பதற்கு ஆஸ்திரேலியா தயாராகிவருகின்றது.
மன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
மன்னர் மற்றும் ராணி ஆகியோருக்கு நாடாளுமன்ற மாளிகையில் பிரதமர் தலைமையில் அரசமுறை மரியாதை வரவேற்பளிக்கப்படும்.
மன்னர் சார்ள்ஸ் இதற்கு முன்னர் 17 தடவைகள் ஆஸ்திரேலியா வந்திருந்தாலும் அவர் மன்னராக அரியணையேறிய பின்னர் கன்பரா வரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
சிட்னி மற்றும் கன்பரா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் இருவரும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், பூர்வக்குடி மக்களின் பிரதிநிதிகளையும் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் சந்திக்கவுள்ளனர்.