ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்கள், வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்குரிய தேர்வை அவர்கள் மீண்டும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்ற வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு வாகன உரிமத்தை ஆஸ்திரேலியாவில் பயன்படுத்துவதற்கு EDR அனுமதி வழங்கி இருந்தது.
இந்த அனுமதி கடந்த புதன்கிழமையுடன், ஆஸ்திரேலியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கமைய பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, ஹங்கேரி, ஹாங்காங் , லாட்வியா, லிதுவேனியா, போலந்து, சைப்ரஸ் தென் கொரியா , செர்பியா குடியரசு, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள், ஆஸ்திரேலிய சாலைகளில் தொடர்ந்து வாகனம் ஓட்ட விரும்பினால் ஆஸ்திரேலிய ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தற்காலிக குடியிருப்பு அந்தஸ்தில் உள்ளவர்கள் தங்கள் வெளிநாட்டு உரிமத்தைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.